என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சிறப்பு அந்தஸ்து ரத்து
நீங்கள் தேடியது "சிறப்பு அந்தஸ்து ரத்து"
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. #Pulwamaattack #Arunjaitley #MFNationstatus
புதுடெல்லி:
இந்தியாவின் எதிரிநாடாக இருந்தாலும் அண்டைநாடாக இருக்கும் பாகிஸ்தானுக்கு 'மிகவும் முக்கியத்துவமான நாடு’ என்ற சிறப்பு தகுதியை இந்திய அரசு கடந்த 1996-ம் ஆண்டு அளித்தது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, ‘மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கு முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது’ தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் நேரடி தொடர்பு உள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இந்த தாக்குதலை ஏவி விட்டவர்கள் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். இதுபோன்ற வன்முறைகளை தூண்டிவிடும் பாகிஸ்தானை சர்வதேச சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத்துறை
உறுதியாக எடுக்கும் எனவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.
இதற்கிடையே, உடல்நலக்குறைவால் அருண் ஜெட்லியிடம் இருந்து ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயலிடம் முன்னர் அளிக்கப்பட்டிருந்த நிதித்துறை இலாகாவுக்கு பிரதமரின் ஆலோசனைக்கு பின்னர் ஜனாதிபதி ஒப்புதலுடன் அருண் ஜெட்லி இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். #Pulwamaattack #Arunjaitley #MFNationstatus #PakistanMFNationstatus

இதன் மூலம் பாகிஸ்தான் - இந்தியா இடையே தங்குதடையற்ற வகையில் வர்த்தகம் நடைபெற்று வந்தது.

×

X